Sports

"மோசமாக இருக்கிறது, இதில் எப்படி பீல்டிங் செய்ய முடியும் ? "-சர்ச்சையில் சிக்கிய உலகக்கோப்பை மைதானம் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஏற்கனவே மழை காலத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடத்துவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகக்கோப்பைக்காக அமைக்கப்பட்டுள்ள மைதானங்கள் மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

உலகக்கோப்பை நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக உலகக்கோப்பைக்கான மைதானங்கள் குறித்து ஐசிசி-யின் ஆய்வு குழு இந்தியா வந்து ஆய்வினை நடத்தியது.அதில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் சோதனை நடத்தியபோது அங்கிருந்து புற்களில் அதிகளவில் பூஞ்சைகள் இருப்பதை ஐசிசி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக பிசிசிஐ-க்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய பிசிசிஐ அதிகாரிகள் விரைவில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், தர்மசாலா மைதானம் பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளதாகவும், அங்கு பீல்டிங் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இங்கிலாந்து வீரருமான முயன்றால்காயம் ஏற்படும் என்று பயப்படுகிறார்கள். மைதானம் இப்படி இருந்தால் எப்படி டைவ் அடிக்க முடியும்? ஐசிசி இந்த மைதானம் மட்டுமல்ல மற்ற மைதானங்களின் அவுட் ஃபீல்டின் தரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: Asian Games : வரலாற்று சாதனை.. அசத்திய வீரர், வீராங்கனைகள்.. இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை ?