Sports
“இந்தியாவில் இதை எதிர்பார்க்கவே இல்லை, பாகிஸ்தானில் இருப்பதைப் போல இருக்கிறது” - பாபர் அஸாம் நெகிழ்ச்சி !
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை சர்ச்சை காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இந்தியா வரவிருந்த பாகிஸ்தான் அணிக்கு இறுதிகட்டத்தில் தான் இந்திய அரசால் விசா வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் ஹைதரபாத் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு குறித்து பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான், ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி ஆகியோர் சமூக வலைதளத்தில் சிலாகித்து பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம், இந்தியாவில் இருப்பதை சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம் எனக் கூறியுள்ளார்.
ஐசிசி சார்பில், ‘கேப்டன்ஸ் மீட்’ என்ற பெயரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலந்துகொண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாமிடம் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, முதல்முறையாக இந்தியா வந்த அனுபவம் குறித்து கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாபர் அஸாம், “இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் ஆச்சரியமாக உள்ளது. இந்திய மண்ணில் எங்களுக்கு ரசிகர்கள் இவ்வளவு அன்பை பொழிவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. எங்களின் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!