Sports
"அஸ்வினுக்காகவே இந்திய பிட்ச்கள் உருவாக்கப்படுகிறது" - தமிழ்நாடு முன்னாள் வீரரின் கருத்தால் சர்ச்சை !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் குறைந்தது ஒரு தமிழ்நாடு வீரராவது அணியில் இடம்பிடிப்பர். ஆனால், இந்த உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இடம்பிடிக்காதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்தனர். அதில் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட் இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் அஸ்வின் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.அதற்கு ஏற்க அக்சர் படேலின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே இந்திய பிட்ச்கள் உருவாக்கப்படுகிறது என முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவராமகிருஷ்ணன்
தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் குழுவில் ஒரு தரமான ஸ்பின்னர்கூட இல்லை.அப்படியானால் எப்படி மக்கள் சுழல் பந்து வீச்சை பற்றி தெரிந்து கொள்வார்கள்" என ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு ஒரு ரசிகர் அஸ்வினின் தேர்வு குறித்து கேள்வியெழுப்ப, அதற்கு பதிலளித்த சிவராமகிருஷ்ணன், "இந்திய மண்ணில் இருக்கும் பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறுகின்றனர். வேண்டுமானால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வினின் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!