Sports
"இது நடக்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை," - உலகக்கோப்பை தொடரோடு ஓய்வை அறிவிக்கிறாரா அஸ்வின் ?
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் குறைந்தது ஒரு தமிழ்நாடு வீரராவது அணியில் இடம்பிடிப்பர். ஆனால், இந்த உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இடம்பிடிக்காதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்தனர். அதில் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட் இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் அஸ்வின் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ஏற்க அக்சர் படேலின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், நான் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இன்று அணியில் இருக்கிறேன். சூழ்நிலை எப்போது மாறும் என்பதை சொல்லவே முடியாது. அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை காட்டி உலககோப்பைக்கு என்னை தேர்வு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை சிறப்பாக விளையாடுவது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?