Sports

உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் - கம்பீர் சொன்ன வீரர் யார் தெரியுமா ?

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வென்று இந்தியா இன்னும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது. இந்த தொடரில் யார் வெற்றிபெறுவர் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த தொடரில் யார் அதிக ரன்கள் குவிப்பர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கம்பிர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " உலகக்கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்மித் ஆகியோர் மீதுதான் அதிக கவனம் இருக்கும்.

ஆனால், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என்று நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பை தொடரை சுவாஸ்யமாக்க கூடிய வீரராகவும் பாபர் அசாம் இருப்பார். பாபர் அசாமிடம் தனித்துவமான திறமை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆசிய விளையாட்டுப போட்டி.. கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதிசெய்தது இந்திய மகளிர் அணி.. தங்கம் வெல்லுமா ?