Sports
கார்ப்ரேட்டுகளுக்கு பதில் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைக்க முயற்சியுங்கள்: BCCI-யை விமர்சித்த முன்னாள் வீரர்!
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆனால், இந்த போட்டிகளுக்காக டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றவர்கள் போட்டிக்கு முன்னதாகவே அகமதாபாத்துக்கு வந்து ஆன்லைன் டிக்கெட்டுகளை அசல் டிக்கெட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஸ்பான்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்குவதால் ரசிகர்களுக்கு போதிய அளவு டிக்கெட் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தொகையை ஒதுக்குவதற்கு பதிலாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்தால் நிறைவாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பதிவில், "பொதுவாக உலகக் கோப்பை டிக்கெட் வாங்குவது சுலபமல்ல. ஆனால் இப்போது முன்பை விட கடினமாக இருக்கிறது. டிக்கெட்களை வாங்குவதற்கு ரசிகர்கள் சந்திக்கும் இன்னல்களை நினைத்து நான் வருந்துகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் முதன்மை பங்குதாரர்களான அவர்கள் எளிதாக டிக்கெட் பெறுவதற்கு பிசிசிஐ வழி செய்ய வேண்டும். உலகக்கோப்பை டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். ரசிகர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 1 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு குறைந்தபட்சம் 8500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் இரசிகர்களுக்காக கார்ப்பரேட்டுகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பெரிய தொகையை ஒதுக்குவதற்கு பதிலாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்தால் நிறைவாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!