Sports

அசத்திய தொடக்க ஜோடி.. நேபாளத்தை ஊதித் தள்ளிய இந்தியா.. அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல் !

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் இலங்கை பல்லக்கலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கிஷன் 82 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின் வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியா அடுத்து வரும் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற அதே பல்லக்கலே மைதானத்தில் நேபாள அணியை சந்தித்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிரண்டிய நேபாள அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் பின்வரிசை வீரர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க அந்த அணி 48.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் மழை பெய்த காரணந்தால் இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் ரோஹித், கில் ஜோடி 20.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. ரோஹித் 74 ரன்களும், கில் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Also Read: ”இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எப்படி நட்பை வெளிப்படுத்தலாம் ?” - கவுதம் கம்பீர் காட்டம் !