Sports
அஸ்வின், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த BCCI !
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.
அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா, சிராஜ், சமி, குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படவில்லை.
இதே அணிதான் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடப்போகிறதா அல்லது, இதில் வேறு ஏதும் மாற்றம் இருக்குமா என கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சூரியகுமார் யாதவ் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி விவரம்.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ்,
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!