Sports
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்தியா செய்த சாதனை இதுதான் - பாக். முன்னாள் வீரர் புகழாரம் !
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் இலங்கை பல்லக்கலே மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும், கோலி 4 ரன்களுக்கும், அடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யரும் 14 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்க வீரர் கில்லும் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி, 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். பின்னர் கிஷன் 82 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டாப் ஆர்டர் சொதப்பினாலும் நடு வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி சவாலான இலக்கை எட்டியது.
இந்த நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்கும் நிலை கூட வந்திருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் சில வீரர்களை தவிர்த்து பெரும்பாலானவர்கள் அழுத்தமான போட்டி அனுபவத்தை கொண்டிருக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டானது இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
அவர்கள் இந்தியாவுக்கு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள். அதே நேரம் அந்த இலக்கை பாகிஸ்தான் எளிதாக சேசிங் செய்திருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக ஆடியிருந்தால் பாகிஸ்தானின் வெற்றி கடினமாகியிருக்கும். இதனால் இந்த போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிதான் கிடைத்தது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஆரம்பத்திலேயே அவுட்டாகி விட்டதை பேசும்போது, அவர்கள் ஆட்டமிழந்தாலும், இந்தியா 270 ரன்கள் அடித்ததை பற்றியும் பேசவேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!