Sports
அப்போ மொயின் அலி, இப்போ பென் ஸ்டோக்ஸ், அடுத்து அலெக்ஸ் ஹேல்ஸா? - இங்கிலாந்தை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !
32 வயதான இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், 104 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜோ ரூட்டின் விலகளுக்கு பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் அவர் மீது இங்கிலாந்து பத்திரிகைகள் கடும் விமர்சனம் வைத்தன.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இது குறித்து கூறிய அவர் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார்.அதன்பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அவர், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
இதனிடையே இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அதில் பென் ஸ்டோக்ஸ் இருக்கவேண்டும் என ஒருநாள் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வேண்டுகோள் விடுத்தார். அதோடு இங்கிலாந்து வாரியத்தின் சார்பில் பென் ஸ்டோக்ஸிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இதன் காரணமாக அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், அதற்கான வீரர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்த மொயின் அலி தனது ஓய்வை திருப்பபெற்று ஆஷஸ் அணியில் இடம்பிடித்தார் . இப்போது அவர் வழியில் பென் ஸ்டோக்ஸும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சமீபத்தில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் அடுத்து டி20 உலககோப்பையின்போது தனது ஓய்வை திரும்பப்பெற்று அணியில் இணைவார் என இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?