Sports
"தோனியின் வார்த்தையை வைத்து இந்திய அணி தனது தவறை நியாப்படுத்துகிறது" -முன்னாள் வீரர் விமர்சனம் !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்னர்ட் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. பின்ன நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.பின்னர் முக்கியமான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
அதன் பின்னர் நடைபெற்ற மிகவும் முக்கியமான 5-வது டி20 போட்டியிலும் இந்திய அணி பயங்கரமாக சொதப்பியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா "தொடரை இழந்ததற்கு நான் உள்பட, இந்திய அணி வீரர்களின் மோசமான பேட்டிங்தான் காரணம். சில சமயங்களில் தோல்வியும் நல்லதுதான். ஏனெனில், தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார். அதோடு கடந்த சில போட்டிகளாக இந்திய அணி முக்கிய போட்டிகளில் தோல்வியை சந்திக்கும்போது அணி கேப்டனும் சரி, பயிற்சியாளர் டிராவிட்டும் சரி இந்த தோல்வி எல்லாம் பொருட்டே இல்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர். இதை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், தோனி கூறிய வார்த்தையை வைத்து இந்திய அணி அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர் என இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த அவர், இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவும், ராகுல் டிராவிட்டும் தான் முக்கிய காரணம். தோனி Process என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அணியை வெற்றிபெற வைத்து தான் சொன்னதை செய்து காட்டினார். ஆனால், இப்போதைய இந்தியா அணி Process என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தி, அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தி வருகின்றது. அணி தேர்வில் ஒரு தெளிவே இல்லை. சம்பந்தமே இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய அணியையும் பலவீனப்படுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?