Sports

"பிற வாரியங்களின் பணத்தை எடுத்து BCCI-க்கு கொடுப்பதா ? -ICC-யின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு !

ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.

இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.

ஸ்பான்சர் உரிமம், ஒளிபரப்பு உரிமம் என இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை கட்டுப்படுத்தும் பிசிசிஐ கோடியில் வருமானம் ஈட்டத் தொடங்கியது. அதிலும் ஐபிஎல் தொடர் வந்தபின்னர் பிசிசிஐ-யின் வருமானம் அதன் அடுத்த உச்சத்தை தொட்டு ஐசிசி-யையே கட்டுப்படுத்தும் அளவு சென்றது.

ஐசிசி-யின் வருமானத்தில் பெரும்பங்கு இந்தியாவில் இருந்து செல்வதால் ஐசிசி தனது உறுப்பு நாடுகளுக்கு கொடுக்கும் தொகையிலும் இந்தியாவின் ஆதிக்கம் அதகரித்தவண்ணம் உள்ளது. அதன்படி புதிய வருமான பகிர்வு மாதிரி அறிமுகப்படுத்தப்பட்ட ஐசிசியின் வருமானத்திலிருந்து 38.5 சதவீத, பிசிசிஐ-க்கு கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

zaka ashraf

இங்கிலாந்து 6.89 சதீவதம், ஆஸ்திரேலியா 6.25 சதவீதம், பாகிஸ்தான் 5.75 சதவீதம் என பிரித்துக்கொடுக்கப்படும் நிலையில், இதர வாரியங்களுக்கான தொகை குறிக்கப்பட்டுள்ளதால் அங்கு கிரிக்கெட் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஐசிசி-யின் இந்த புதிய வருமான பகிர்வு மாதிரியை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப்,"இம்முறை ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் நமக்கான வருமான பகிர்வு இருமடங்காகியுள்ளது. ஆனால் அவர்கள் மற்ற நாடுகளின் வருமானத்தை குறைத்து இந்தியாவுக்கு அதிகமாக கொடுத்துள்ளதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் முடிவு ஓட்டையும் நான் செலுத்தியுள்ளேன். இந்தியாவுக்கு எப்படி இவ்வளவு வருமானத்தை கொடுக்கிறீர்கள் என்பதற்கான கணக்கு வழக்கை எங்களுக்கு கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: ”நான் செய்த தவறை உணர்ந்து தோனியிடன் மன்னிப்பு கேட்டேன்” -பழைய சம்பவத்தை இப்போது விவரித்த சோயப் அக்தர் !