Sports
மீண்டும் மெஸ்ஸி மேஜிக்.. தோல்வியின் பிடியில் இருந்த அணியை மீட்டு வெற்றிபெற வைத்த MESSI .. நடந்தது என்ன ?
அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அந்த அணிக்காக நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்கு ப்ரீ கிக் மூலம் கோல் அடித்து அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதனை இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே ப்ரீ கிக் மூலம் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார். அதன் பின்னரும் அந்த அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி காலிறுதிக்கு முந்தைய போட்டியில் டல்லஸ் அணியை சந்தித்தது. இதில் முதல் கோலை மெஸ்ஸி அடித்து அசத்தினார். ஆனால் Dallas அணி அடுத்தடுத்து கோல் அடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருந்த நிலையில் மெஸ்ஸியின் அணி தோல்வியடையப்போகிறது என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், அதன் பின்னர் ஓன் கோல் மூலம் இன்டர் மியாமிக்கு ஒரு கோல் கிடைத்த 85ஆவது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் கோல் அடித்து மெஸ்ஸி ஆட்டத்தை 4-4 என சமநிலைக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் நடைபெற்ற பெனால்டி கிக் முறையில் இன்டர் மியாமி அணி 4-3 என்ற கணக்கில் டல்லஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் 2 கோல் அடித்து வெற்றிக்கு மெஸ்ஸி முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!