Sports
பணம் இருந்து என்ன பயன்? நாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போல இல்லை -இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென பெய்த மழை காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் உலககோப்பைக்கு தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் இந்த தோல்வியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சமீப காலமாக இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்து இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து பிற போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது.
கடந்த இரண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் நாம் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பிசிசிஐயிடம் பணமும் அதிகாரமும் இருந்தும், இங்கிலாந்து அணியை போல் ரசிகர்களிடையே எவ்வித உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை, ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியை போல பிற அணிகளை மிரட்டியதும் இல்லை. நாம் வீரர்களின் மோசமான ஆட்டத்தை கூட கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?