Sports

அயர்லாந்துக்கு எதிரான T20: கேப்டனாக நட்சத்திர வீரர்.. IPL ஸ்டார்க்கு வாய்ப்பு.. மூத்த வீரர்களுக்கு ஓய்வு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம்வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக நீண்ட நாள் இந்திய அணியில் இடம்பெறாத பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் இந்த அணியில் கோலி, ரோஹித், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு ஐபிஎல் தொடரில் ஜொலித்த ரிங்கு சிங்குக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:

ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

Also Read: "IPL என்றால் ஆடுகிறார்கள், நாட்டுக்கு என்றால் Break கேட்கிறார்கள்" -இந்திய வீரர்களை விமர்சித்த கபில்தேவ்!