Sports
"சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் இப்படியா நடப்பது ?" -இந்திய கேப்டனை விமர்சித்த ஷாகித் அப்ரிடி !
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றிபெற்றது. எனினும் சுதாரித்த இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதலில் சிறப்பாக ஆடினாலும் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. அந்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்த இந்திய அணி வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விக்கெட்டை இழந்து ஆல் அவுட்டானது. இதனால் போட்டி சமனில் முடிய ஒரு நாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நடுவர் எல்.பி முறையில் ஆட்டமிழந்ததாக கூறினார். ஆனால், நடுவரின் இந்த முடிவால் ஆத்திரம் அடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பை பேட்டால் தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஐசிசி அபராதமும் விதித்தது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு போட்டியில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ” ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல்பாடு போல கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வு பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் பெண்கள் கிரிக்கெட்டில் நாம் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடக்காது.
ஓரு வீரராக அம்பயரின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஹர்மன்பிரீத் கவர் போன்ற ஒருவர் எதிர்கால தலைமுறைக்கு பெரிய முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் இவ்வாறு நடந்து கொள்வது ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம் ஆனால் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!