Sports
உலகக்கோப்பை ப்ரோமோ வீடியோவில் எங்கள் கேப்டன் எங்கே ? -பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கேள்வி !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கடைசியாக ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதோடு உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இந்த முறை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இந்திய நடிகர் ஷாரூக் கானின் பின்னணி குரலில் உலகக்கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. அனைத்து நாடுகளின் கேப்டன்களும் வரும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் புகைப்படம் இடம்பெறாத நிலையில், பாகிஸ்தான் உலகக்கோப்பையை வென்ற தருணமும் இடம்பெறவில்லை. அஷடய பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததும், பாகிஸ்தான் ரசிகர்கள் சோகமாக அமர்ந்திருப்பதுமான ப்ரோமோ காட்சிகளே படமாக்கப்பட்டுள்ளன.
இதனைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் , "பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இல்லாமல் உலகக்கோப்பை ப்ரோமோவை உருவாக்குவதாக நினைத்து, மிகப்பெரிய நகைச்சுவையை செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வளருங்க பாஸ்"என கிண்டலாகக் கூறியுள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு