Sports
பாகிஸ்தானின் சர்வதேச பந்து வீச்சாளர்களை விளாசிய தமிழ்நாடு வீரர்.. ஆசிய கோப்பையில் சதமடித்து அசத்தல் !
உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.
அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பான ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் அவர் களமிறங்கினார்.
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மைதானமே அவரின் இந்த ஆட்டத்தை எழுந்து நின்று பாராட்டியது. இந்த அபார ஆட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். டி.என்.பி.எல் தொடரில் ஐபிஎல்-லை விட அதிக தொகை கொடுத்து சாய் சுதர்சனை கோவை கிங்ஸ் அணி எடுத்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாய் சுதர்சன் திகழ்ந்தார். இதன் காரணமா அவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி நேபாளம் அணியை வீழ்த்தியது.
அதன் பின்னர் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அசத்தலாக பந்து வீசிய ஹங்கர்கேகர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணியில், சாய் சுதர்சன் அபிஷேக் சர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 58 - ஆக இருந்தபோது அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜிகின் ஜோஸ் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் யாஷ் துல்லும், சாய் சுதர்சனும் ஜோடி சேர்ந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். இறுதிவரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் கடைசி இரு பந்துகளையும் சிக்ஸர் விளாசி சதமடித்து அசத்தினார். இந்திய அணி அடுத்ததாக அரையிறுதியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!