Sports
இந்திய அணியில் மீண்டும் கலக்கிய தமிழ்நாடு வீரர்.. அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா! -முழு விவரம் என்ன?
உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது. இதனால் இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பான ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் அவர் களமிறங்கினார்.
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மைதானமே அவரின் இந்த ஆட்டத்தை எழுந்து நின்று பாராட்டியது. இந்த அபார ஆட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். டி.என்.பி.எல் தொடரில் ஐபிஎல்-லை விட அதிக தொகை கொடுத்து சாய் சுதர்சனை கோவை கிங்ஸ் அணி எடுத்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாய் சுதர்சன் திகழ்ந்தார். இதன் காரணமா அவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி நேபாளம் அணியை சந்தித்தது. இதில் முதலில் ஆடிய நேபாளம் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா ஜோடி அபாரமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்த போது அபிஷேக் சர்மா (87) ஆட்டமிழக்க, அடுத்து வந்த துருவ் ஜூரல்- சாய் சுதர்சன் ஜோடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தது. இதில் சாய் சுதர்சன் 52 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!