Sports

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - பதக்க எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இந்தியா.. கொண்டாடும் ரசிகர்கள் !

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில், சமீப ஆண்டுகளில் பிற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதோடு ஐபிஎல் பாணியில், கால்பந்து, கபடி, வாலிபால், இறகுப்பந்து ஆகிய போட்டிகளுக்கும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், சமீபத்திய ஆண்டுகளில் தடகளம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் முக்கிய தொடர்களில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதன் மூலம் பதக்கபட்டியதில் இந்தியா 3-ம் இடத்தை பிடித்து அசதியுள்ளது. முதல் இடத்தை 16 தங்கம் என 37 பதக்கங்களுடன் ஜப்பான் பிடித்த நிலையில், 8 தங்கம் என 22 பதக்கங்களை பெற்று சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 6 தங்கத்துடம் 25 பதக்கங்களோடு இந்தியா 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

இதில் இந்தியா சீனாவை விட அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்தாலும், இந்தியாவை விட அதிக தங்கப்பதக்கம் வென்றதால் சீனா பதக்கபட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா வரும்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read: இந்திய அணியில் மீண்டும் கலக்கிய தமிழ்நாடு வீரர்.. அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா! -முழு விவரம் என்ன?