Sports

இமாலய இலக்கை நோக்கி இந்தியா.. அறிமுக டெஸ்டில் சதமடித்து ஜெய்ஸ்வால் சாதனை.. பரிதாப நிலையில் WEST INDIES !

டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

இதனால் இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியைத் தொடர்ந்து அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இளம்வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம்வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அபாரமான பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் மற்றும் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான விளையாடினர். இதில் அனுபவ வீரர் போல தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

மேலும், கேப்டன் ரோகித்சர்மாவும் சதம் விளாசி அசத்த, இந்த ஜோடி 229 ரன்களுக்கு பிரிந்தது. ரோஹித் சர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த வந்த கில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் அடுத்த வந்த கோலி, ஜெய்ஸ்வாலோடு சேர்ந்த சிறப்பாக ஆட இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட இழப்புக்கு 312 ரன்கள் குவித்துள்ளது. கோலி 36 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய 17 ஆவது இந்தியர் என்ற பெருமையையும் மூன்றாவது தொடக்க வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். மேலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எதிராக அதிக பார்ட்னர்ஷிப் (229 ரன்கள்) அமைத்த தொடக்க வீரர்கள் என்ற பெருமையை ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி பெற்றுள்ளது. இதற்கு முன்புல் சேவாக் - வஸிம் ஜாபர் ஜோடி 159 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பல மடங்கு அதிகரித்த IPL-ன் மதிப்பு.. முதலிடத்தில் CSK.. RCB, MI அணிகளில் மொத்த மதிப்பு என்ன தெரியுமா ?