Sports
ரோஹித்துக்கு பதில் டெஸ்ட் கேப்டனாக மீண்டும் கோலியா? - முன்னால் தேர்வுக்குழு உறுப்பினர் பரபரப்பு கருத்து!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
அதன்பின்னர் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விலக, ரோஹித் மூன்றுவிதமான போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் கேப்டன்ஸி மோசமாக இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோஹித்துக்கு பதில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கோலியை கேப்டனாக்குவது குறித்து முன்னால் தேர்வுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”
ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக வரலாம். ஆனால், ஏன் விராட் கோலி அந்த இடத்துக்கு வரக்கூடாது. ரஹானே மீண்டும் வந்து துணை கேப்டனாக முடியும் போது, விராட் கோலி ஏன் கேப்டனாக முடியாது? தேர்வாளர்கள் ரோஹித்தை மீறி யோசித்தால், விராட் கோலியும் ஒரு தேர்வாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?