Sports
தொடக்க வீரராக ராஜஸ்தான் வீரருக்கு வாய்ப்பு.. CSK வீரருக்கு வாய்ப்பு மறுப்பு.. ரோஹித்சர்மா அறிவிப்பு !
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேர்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.
கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி மேற்கினித்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் யாராவது ஒருவருக்குத்தான் அணியில் இடம்கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரரான களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித்சர்மா கூறியுள்ளார்.
இதனால் வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் சுப்மான் கில் 3-வது வீரராக களமிறங்குவார் என்றும், ஜெய்ஸ்வாலோடு தான் தொடக்கவீரராக களமிறங்கவுள்ளதாகவும் ரோஹித்சர்மா கூறியுள்ளார். இந்திய அணியில் வழக்கமாக 3-வது வீரராக களமிறங்கும் புஜாரா இந்தத் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?