Sports
" என்ன திட்டம் இது? சுயநினைவுடன் தான் இதை செய்தீர்களா ? " -இந்திய அணியை விளாசிய சுனில் கவாஸ்கர் !
டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.
இதனால் இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது.
இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு அஸ்வினை அணியில் சேர்க்காதது. மாற்று திட்டம் ஏதும் இல்லாமல் களமிறங்கியது என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. அதில் முக்கியமானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை விட ஐபிஎல் தொடருக்கும் இந்திய அணி முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்பட்டது.
ஐபிஎல் தொடர் முடிந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணி வீரர்கள் 10 நாள் முதல் 5 நாளுக்கு முன்னர்தான் இங்கிலாந்து சென்றனர். இதனால் அங்குள்ள சீதோஷண நிலைக்கு இந்திய வீரர்களால் எளிதில் பழகவில்லை. மேலும், போதிய நேரமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆடியதே தோல்விக்கு முக்கியமாக பார்க்கப்பட்டது.
ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்து இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாட சுமார் 20 நாட்களுக்கு முன்னரே அங்கு சென்றுள்ளனர். இதனை குறிப்பிட்டு இந்திய அணி வீரர்களின் அர்ப்பணிப்பை பல்வேறு ரசிகர்களும் விமர்சித்திருந்தனர்.
அந்த வகையில், இந்திய அணியில் இந்த முடிவை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு செல்கின்றனர். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கோ 25 நாட்களுக்கு முன்னரே செல்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!