Sports

நாட்டை விட பணம் தான் பெரியதா ? முதலில் நாட்டுக்கு முக்கியம் கொடுங்க.. -BCCI-யை விமர்சிக்கும் ரசிகர்கள் !

இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 யில் ப்ளூ நிற ஜெர்ஸியை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. அதைப்போல டெஸ்ட் போட்டிகளில் மரபான வெள்ளை நிற ஜெர்சியை பயன்படுத்தி வருகிறது இந்த ஜெர்சியில் ஸ்பான்சர்களின் பெயர் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும்.

சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியை பிரபல அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்திருந்தது. அந்த ஜெர்சியின் முன்பக்கத்தில் இந்தியா என அச்சடிக்கப்பட்டிருந்தது பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

மேலும், இந்திய அணி இதுவரை அணிந்த டெஸ்ட் ஜெர்சியிலேயே அந்த டெஸ்ட் பார்ப்பதற்கு அழகாகவும், உலகத்தரம் வாய்ந்ததாகவும் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டெஸ்ட். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இதற்காக இந்திய அணியில் புதிய ஸ்பான்ஸரான dream 11 புதிய டெஸ்ட் சீருடையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதில் இந்தியா என்ற பெயரை நீக்கி அந்த இடத்தில் dream 11 என தங்கள் நிறுவனத்தின் பெயரை அந்த நிறுவனம் அச்சிட்டுள்ளது. இந்த செயல் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு தற்போது பிசிசிஐ-யை பலரும் விமர்சித்து வருகின்றனர். பணத்துக்காக இந்தியா என்ற பெயரை பிசிசிஐ நீக்கிவிட்டதா என்றும், பல இடங்களில் இருந்து வருமானம் வரும் பட்சத்தில் கூட பிசிசிஐ-க்கு இந்தியா என்ற வார்த்தை முக்கியம் இல்லையா என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "நான் மெஸ்ஸி, ரொனால்டோவை விட சிறந்தவன்" -இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி கருத்து !