Sports
"மீண்டும் பல்டியடித்த பாகிஸ்தான்.. உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவுக்கு வரமாட்டோம்" -அமைச்சர் கருத்து !
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.
இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.
அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டி விளையாட பொது இடத்தை இந்தியா வலியுறுத்தினால் நாங்களும் உலகக் கோப்பை விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இஷான் மசாரி, "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இதனால் இது குறித்து நான் கருத்து தெரிவிக்கிறேன்.
ஆசிய கோப்பை போட்டியை முழுமையாக பாகிஸ்தானில் நடத்தவேண்டும். ஆசிய கோப்பையை நடத்தும் எங்களுக்கு அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்தும் உரிமை உள்ளது. எங்களுக்கு ஹைபிரிட் மாடல் முறை வேண்டாம். ஒருவேளை, ஆசிய கோப்பை போட்டி விளையாட பொது இடத்தை இந்தியா வலியுறுத்தினால் நாங்களும் உலகக் கோப்பை விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம்"என்று கூறியுள்ளார்
Also Read
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?