Sports
நொறுங்கிய கார்.. விபத்தில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்: எப்படி இருக்கிறார் பிரவீன்குமார்?
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் இந்திய அணியில் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி ஓய்வு பெற்றுள்ளார்.
இருபுறமும் ஸ்விங் செய்வதில் பிரவீன்குமார் பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிபெற வைத்துள்ளார்.
இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் முறையே 27, 77 மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரை இந்தியா வென்றதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் பிரவீன்குமார் தனது மகனுடன் காரில் சென்றுள்ளார். மீரட் நகர் அருகே இவர்களது கார் சென்றபோது டிரக் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் மற்றும் அவரது மகன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டிரக் ஓட்டுநரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!