Sports
"சொன்னதை செய்துள்ளேன்" : இந்தியாவுக்கு வருகைதந்த அர்ஜென்டினா கோல்கீப்பர்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், இறுதி கட்டத்தில், பிரான்ஸ் வீரர் அடித்த பந்து கோலை நோக்கி சென்ற நிலையில், அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அதனை அட்டகாசமான முறையில் தடுத்தார்.
அதன்பின்னர் போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் திகழ்ந்தார்.
அதன்பின்னர் கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பிதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர்.
அப்போது உலககோப்பையில் சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம்பதித்த குழந்தை வடிவ பொம்மையை கையில் வைத்து அவரை கேலி செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவுக்கு வந்துள்ள அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் பிரபல கால்பந்து கிளப்பான மோஹன் பகான் அணியினரை சந்திக்கும் அவர், அந்த அணியில் மைதானமான சால்ட் லேக் மைதானத்தில் ‘பீலே-மரடோனா-சோபர்ஸ் கேட்’டினை அவர் திறந்து வைக்கிறார். இந்த பயணம் குறித்து பேசிய மார்டினஸ் , "இந்திய நாட்டுக்கு வர வேண்டும் என்பது கனவு. நான் இந்தியா வருவேன் என உறுதி கொடுத்திருந்த படி இப்போது வந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?