Sports
WEST INDIES அணியைத் தொடர்ந்து ZIMBABWE.. ICC உலககோப்பையிலிருந்து நட்சத்திர அணிகளை வெளியேற்றிய SCOTLAND!
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
அதன்பின்னர் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் தற்போது ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில், ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுத்து. அந்த அணியில், லீஸ்க் 48 ரன்களும், மெக்முல்லன் 34 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில், சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே வென்றால் உலககோப்பைக்கு தகுதிபெறும் என்ற நிலையில், அந்த அணி களமிறங்கியது. ஆனால், ஆரம்பத்தில் இருந்து அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஜிம்பாப்வே அணியை மூத்த வீரர் சிக்கந்தர் ராசா போராடி மீட்க முயன்றார்.
ஆனால், அவர் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரியான் பர்ல்- மாதவரே சிறப்பாக ஆட வெற்றியை நோக்கி ஜிம்பாப்வே பயணித்தது. ஆனால், இந்த ஜோடி ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் விரையில் சரிய இறுதியில், 41.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டது.
இந்த தோல்வியின்மூலம் ஜிம்பாப்வே அணி உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அடுத்து நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணி பெரிய வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தினார் அந்த அணி உலககோப்பைக்கு தகுதி பெரும். அல்லது ஸ்காட்லாந்து அணி உலககோப்பைக்கு தகுதிபெரும். ஏற்கனவே மேற்கு இந்திய தீவுகள் அணி உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?