Sports
பென் ஸ்டோக்ஸின் ருத்ரதாண்டவம்.. 9 பீல்டர்களை எல்லையில் குவித்த ஆஸ்திரேலியா.. போராடி தோற்ற இங்கிலாந்து!
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பையை இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இறுதி நாளில் இறுதி கட்டத்தில் 2 விக்கெட்டுகள் மீதான இருந்த நிலையில், 54 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால், கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் எதிர்பாராத இடத்தில இருந்து தங்கள் விக்கெட்களை இழக்காமல் திரில் வெற்றியை பதிவு செய்தது. கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னர் ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அந்த அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானதாக கருதப்பட்டது.
ஆனால், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரின் இந்த அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 9 வீரர்களையும் எல்லை கோட்டின் அருகே நிறுத்திவைத்து. அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்ற பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அங்கேயே இங்கிலாந்தின் வெற்றிவாய்ப்பும் முடிவுக்கு வந்தது. பின்னர் அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!