Sports
"தோனியை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை" -சேவாக்கின் கருத்தால் சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் தோனி குறித்த சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேவாக் ”2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நடுவரின் முடிவுக்கு எதிராக தோனி செய்தது முறையற்றது. அவர் பல இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் முறையற்ற செயலில் ஈடுபட்டார். இந்த குறைந்த பட்சம் இரண்டு, மூன்று போட்டிகள் அவரை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது நடக்காமல் போனது. இறுதியாக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு தப்பித்துவிட்டார். இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இனி நடந்தால் கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியின்போது, சென்னை அணி பேட்டிங் செய்தபோது, பந்து இடுப்பிற்கு மேலே வீசப்பட்டது. ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் அதற்கு நோபால் கொடுக்காத நிலையில், களத்திற்கு உள்ளே நுழைந்து நடுவர்களிடம் விவாதம் செய்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !