Sports
”எல்லோரும் சொதப்பியபோது புஜாரா மட்டும் பலிகடாவா?”.. BCCI தேர்வுக் குழுவை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர்!
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேர்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.
கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது. இந்தியாவின் தோல்விக்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஷ்வினை அணியில் சேர்க்காதது முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. சச்சின் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதனைக் குறிப்பிட்டு இந்திய அணியை விமர்சித்தனர்.
இந்த தொடரை அடுத்து இந்திய மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இடம் பெற்று இருந்த புஜாரா மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புஜாராவுக்கு ஆதரவாக இந்திய அணியில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பேட்டி ஒன்றிய பேசிய அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானவை தவிர அனைத்து வீரர்களுமே சொதப்பலாக விளையாடினார்கள். ஆனால் புஜாரா மட்டும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். ஏன் அவரை மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்? அவருக்கு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்கள் இல்லாததால் எளிதாக நீக்கிவிட்டீறர்களா? " என BCCI தேர்வுக் குழுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!