Sports
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய அணியின் தோல்வி குறித்து அஸ்வின் கூறியது என்ன ?
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.
கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் சேர்க்காதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து அஸ்வின் ட்வீட் செய்துள்ளதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவரின் ட்வீட்டில், "#WTCFinal ஐ வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் முடிவு இந்தியாவிற்கு எதிராக அமைந்தது பெரும் ஏமாற்றதை அளிக்கிறது. இந்த இடத்திற்கு வர கடந்த 2 ஆண்டுகளில் பெரும் முயற்சிகள் எடுத்துள்ளோம். இருப்பினும்,இந்த இரண்டாண்டுகளில் உறுதியாக விளையாடிய எனது சக கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாக இருந்த ஊழியர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?