Sports
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியனாகுமா இந்தியா? -இன்று தொடங்குகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று எப்போதுமே தனி எதிர்பார்ப்பு இருக்கும். காலத்தின் வேகத்தால், ஒருநாள், டி20 பார்மெட் போட்டிகளும் காலடி பதிக்க டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைய தொடங்கியது. 5மணி நேரம் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியை பார்க்கும் இன்றைய 2k கிட்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில், 90ஸ் கிட்ஸ்களுக்கு 5நாள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்த சூழலில், அதனை மீட்டெடுக்க டெஸ்ட் அரங்கில் புதிய தொடரும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒருநாள், டி20 போட்டிகளுக்கு உலகக்கோப்பை தொடர் இருப்பது போல., டெஸ்ட் அரங்கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரில், நடப்பு ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதி யுத்தம் இன்று இந்திய நேரப்படி நண்பகல் 3மணிக்கு தொடங்குகிறது.
மகுடத்திற்கான இந்த இறுதி யுத்தத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அறிமுக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிவரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.இந்த ஆண்டு அசுர பார்மில் இருக்கும் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மகுடத்தை அலங்கரிக்கும் முனைப்பில் உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், புஜாரா,கோலி என பேட்டிங் வரிசை பார்மில் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அரங்கில் ரஹானேவின் வருகை, ஐபிஎல் கோப்பையை Csk வெல்ல பவுண்டரி அடித்த ஜடேஜாவின் சிறப்பு என இந்திய அணி எல்லா வகையிலும் தயாராகியுள்ளது.
கார் விபத்தால் காயத்திலிருந்து மீண்டுவரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ அணியில் இல்லையென்றாலும், பரத் அந்த இடத்தை நிரப்புவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஷன் கிஷான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் கைகொடுக்கவுள்ளனர். இவர்களோடு பந்துவீச்சில் சிராஜ் மற்றும் சர்த்துல் தாக்கூர் கைகொடுக்கவுள்ளனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது கூடுதல் சாதகமாக உள்ளது.
அதேசமயம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கோப்பைய வசப்படுத்த எல்லா வகையிலும் சவால் கொடுக்கும். வார்னர் மற்றும் ஸ்மித் என இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். வார்னர், கவாஜா, லேபுசேன்ஜ், ஸ்மித், அலெக்ஸ் ஹேரி என வலுவான பேட்டிங் வரிசையை கட்டமைத்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, அதிரடி ஆல்ரவுண்டர் கிரீன் மேலும் வலு சேர்க்கிறார்.
இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஐந்து நாட்களும் ஆட்டத்திலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே பார்க்கப்படுகிறது. ஆகையால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பாக 106 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் ஆஸ்திரேலியா 44 போட்டிகளிலும், இந்தியா 32 பொட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது.
இவ்விரு அணிகளும் முதல் முறையாக சொந்த மைதானம் அல்லாமல் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தவிர, ஐசிசி நடத்தும் அனைத்து வகையான உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய அணி என்ற சாதனையையும் இரு அணிகளும் படைத்துள்ளன. ஆகையால், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான மகுடத்தை அலங்கரிக்கும் அணி எது என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அடுத்த 5நாட்களுக்கு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
-செய்தியாளர் மீனா
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?