Sports
"IPL அணிகளால் தேசிய அணிகளுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது" -ஆஸ்திரேலிய அணி கேப்டன் அச்சம் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் அமெரிக்காவில் நடைபெறவுள்ள MLC டி20 தொடரில் ஐபிஎல் அணிக்கு சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட்டில் ஐபிஎல் ஏற்படுத்திய மிகப்பெரும் தாக்கத்தின் விளைவாக கூறப்பட்டது.
இந்த நிலையில், வீரர்களை ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் இருந்து அவர்களது நாட்டுக்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வைப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " கடந்த காலங்களில் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது இல்லை. அந்த நிலையை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஐபிஎல் மாற்றிவிட்டது.
ஆனால், நாட்டுக்காக விளையாடுவதை மற்ற போட்டிகளைக் காட்டிலும் பெரிதாக நினைக்க வேண்டும். ஆனால், அதற்கு ஐபிஎல் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அதே நேரம் நாட்டுக்காக விளையாடுவதைத் தவிர மற்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களை நாம் குறை கூற முடியாது. கிரிக்கெட் தொடர்களும் விரைவில் கால்பந்து கிளப் போட்டிகளை போல மாறும் காலம் விரைவில் இல்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!