Sports
அடுத்த இங்கிலாந்து வீரரும் அவுட்.. IPL அணிகளின் வலையில் தொடர்ந்து சிக்கும் இங்கிலாந்து வீரர்கள் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன. அதோடு தென்னாபிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்து அணிகளை வாங்கியுள்ளனர்.
சமீபத்தில் ஐபிஎல் அணிகள் இங்கிலாந்து அணிக்காக ஆடும் 6 வீரர்களிடம் நாட்டுக்காக ஆடுவதை துறந்து முழுக்க முழுக்க லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி ஐபிஎல் அணிகளோடு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வீரர்கள் ஆண்டு முழுவதும் நடக்கும் லீக் தொடர்களில் சம்மந்தப்பட்ட அணிகளுக்காக விளையாடுவார்கள் என்றும், அவர்கள் தேசிய அணிக்காக நடைபெறும் போட்டியில் ஆட செல்லமாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் அமெரிக்காவில் நடைபெறவுள்ள MLC டி20 தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் இங்கிலாந்து தேசிய அணியில் அவர் இடம்பெற எந்த தடையும் இருக்கப்போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. மேலும்" ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுப்பவர் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஜேசன் ராய் வழியில் மேலும் சில வீரர்களும் தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜேசன் ராயைத் தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து வீரரான ரீஸ் டாப்லியும் இங்கிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அவர், "சிறுவயதில் என்னிடம் கேட்டிருந்தால், இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆட வேண்டும் என்று சொல்லியிருப்பேன். ஆனால், இன்று என்னிடம் கேட்டால் எத்தனை ஐபிஎல் ஆட முடியுமோ அத்தனை ஆடிவிட வேண்டும் எனச் சொல்லுவேன் " என்று கூறியுள்ளார். இதன் மூலம் கால்பந்தை போல கிரிக்கெட்டின் முகமும் மாறிவருகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!