Sports

இங்கு ஒரே ஒரு அரசன்தான்.. கோலியை வம்புக்கு இழுத்த லக்னோ அணி.. விமர்சித்து தள்ளிய ரசிகர்கள் !

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோலியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் மோதிக்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கோலி சதமடித்து அசத்தினார். பின்னர் தொடர்ந்து ஆடிய குஜராத் அணி இறுதி ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

இதில் இறுதிவரை களத்தில் இருந்த குஜராத் வீரர் கில், கடைசி வரையில் ஆட்டமிழக்கமால் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து தனது அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி முடிந்த பின்னர் லக்னோ அணியின் ட்விட்டர் பக்கத்தில் கில்லின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் இன்னும் இளவரசரா ? அவர் ஏற்கனவே அரசர் ! என கூறப்பட்டிருந்தது. ரசிகர்கள் விராட் கோலியை கிங் (அரசர் ) என்று கூறிவரும் நிலையில் அவரை கிண்டல் செய்வதுபோல லக்னோ அணி ட்வீட் செய்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தோனி எவ்வாறு அப்படி சொல்லலாம் ? ஒருவேளை பயத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்" -மலிங்கா கூறியது என்ன ?