Sports
பிரபலமான அணிகள் பட்டியல்.. ரொனால்டோவின் அணியை முந்தி முதலிடம் பிடித்த CSK.. மும்பை இந்தியன்ஸ் நிலை என்ன ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டரில் பிரபலமான 5 ஆசிய விளையாட்டு அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (9.97 மில்லியன்) முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (4.85 மில்லியன்) பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (3.55 மில்லியன்) மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில் நான்காவது இடத்தை பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ இடம்பெற்றுள்ள அல் நசீர் FC அணி(3.50 மில்லியன்) பிடித்துள்ளாது. ஆனால் சென்னைக்கு இணையாக ரசிகர்கள் இருப்பதாக கூறப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி (2.31 மில்லியன்) ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?