Sports
ICC-யின் புதிய விதிமுறைகள் வெளியானது.. -நடுவரால் இனி இந்த பிரச்சனை இல்லை ! புதிய விதிகள் என்ன ?
கிரிக்கெட் விளையாட்டில் காலத்துக்கு ஏற்ப புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தன்படி இந்த புதிய விதிமுறை ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் என்ன ?
1.மூன்றாவது நடுவர் அல்லது டிவி நடுவருக்கு ஏதாவது பரிந்துரைக்கும் போது நடுவர்கள் இனி மென்மையான சமிக்ஞைகளை வழங்க வேண்டியதில்லை. தற்போது, பின்னால் கேட்ச் செய்யப்பட்டதாகவோ அல்லது ரன் அவுட் ஆகவோ மேல்முறையீடு இருந்தால், அதை மூன்றாம் நடுவரிடம் பரிந்துரைப்பதற்கு முன் அவர்கள் தங்கள் கருத்துக்களை அதில் கூற சாப்ட் சிக்னல் கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறை மூலம் அது முடிவுக்கு வருகிறது.
2. ஒரு வேகப்பந்து வீச்சாளர் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் கட்டாயம் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என்றும், அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் வீசும்போது ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும் நிற்கும் விக்கெட் கீப்பர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுளது. மேலும், இந்த ஹெல்மெட் விதி அருகில் நிற்கும் பீல்டர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது,
3. நோ பால் பந்து வீசினால் கொடுக்கப்படும் ப்ரீ-ஹிட் வாய்ப்பில் பந்து ஸ்டம்பை தாக்கினால் , அது பேட்டர் அடித்த ரன்கள் எனக் கணக்கிடப்படும் என்று விதிமுறையை கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்படி எடுக்கப்படும் ரன்கள் அணியில் கணக்கில் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விதிகள் ஜூன் 1 முதல் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான லார்ட்ஸ் ஆட்டத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இந்த விதிகள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!