Sports
"ரிஷப் பண்ட்க்கு மாற்று இவர்தான்" -பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரை கைகாட்டிய கெவின் பீட்டர்சன் !
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.
இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உடல்முழுக்க பலத்த காயமடைந்துள்ளதால் ரிஷப் பண்ட் மீண்டும் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என தகவல் வெளியானது. '
அதோடு ரிஷப் பண்ட்க்கு மாற்றாக யாரை இந்திய அணி கண்டெடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், ரிஷப் பண்ட்க்கு மாற்றாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடும் ஜிதேஷ் சர்மா இந்திய அணிக்கு இருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடும் ஜிதேஷ் சர்மா ஸ்பெஷலான வீரராக தோன்றுகிறார். அவரை பார்த்தால் ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரர் இந்தியாவுக்கு கிடைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. ரிசப் பண்ட் மீண்டும் திரும்புவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் பட்சத்தில் இந்திய அணியில் அந்த இடத்தை நிரப்புவதற்கு அவர் மிகவும் சரியானவர் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா அணிக்கு விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா கடந்த ஆண்டு 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணியில் வாங்கப்பட்டார். அந்த சீசனில் 12 போட்டிகளில் 234 ரன்களை 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அசத்தினார். பின்னர் ந்த சீசனில் 149.98 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி காட்டி வருகிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!