Sports
"விக்கெட் எடுக்காதடா, அவர் வந்தால் சிக்ஸராக அடிப்பார்" -CSK பேட்டிங் குறித்து அஸ்வின் கலகல பேச்சு !
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வீழ்த்தியது.
அதன்பின்னர் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி அதன்பின்னர் பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி அதன்பின்னர் ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் தோல்வியைத் தழுவியது.
இந்த தொடரில் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சளர்களான தீபக் சகார், முகேஷ் சௌந்தரி, ஜேமிசன், மகனா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்து விளையாட முடியாத நிலையில் கூட சென்னை அணி அதிக வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் அதிகம் வென்றால் கூட முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கூட இருக்கிறது.
இந்த வெற்றிகளுக்கு சென்னை அணியின் பேட்டிங் வரிசையே காரணமாக இருக்கிறது. ருத்துராஜ், கான்வே, ரஹானே, ராயுடு, சிவம் துபே, ஜடேஜா, மொயின் அலி, தோனி என களமிறங்கும் அனைவரும் சரவெடியாக வெடித்து அணிக்கு வெற்றியை தேடி தருகின்றனர். சென்னை அணியின் வெற்றிக்கும் இதுவே காரணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை அணியில் விக்கெட் எடுக்க, எடுக்க எண்ணெய் கிணற்றில் இருந்து வருவதை போல பேட்ஸ்மேன்கள் வந்துகொண்டே இருக்கின்றனர் என சென்னை அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் அணியில் விளையாடிவரும் அஸ்வின் கூறியுள்ளார்
இது தொடர்பாக பேசிய அவர், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை இந்த மருதை வேற லெவலாக உள்ளது. விக்கெட் எடுக்க எடுக்க எண்ணெய் கிணற்றில் இருந்து வருவதை போல பேட்ஸ்மேன்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். தூபே வராரு, அவர் போனா மொயீன் அலி வராரு, தோனி Pad கட்டிக்கொண்டு வெளியே உட்கார்ந்திருக்கிறார். 'விக்கெட் எடுக்காதடா, அவர் வந்தால் சிக்சர்களாக அடிப்பார்' என பார்ப்பவர்களுக்கு தோன்றும் விதமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!