Sports
2022-23க்கான வருடாந்திர ஒப்பந்த வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டது BCCI - டாப் பிரிவில் 3 பேருக்கு இடம் !
ஆண்டுதோறும் பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டு அந்த ஆண்டின் திறமையின் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான மகளிருக்கான 17 பேர் கொண்ட வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏ,பி மற்றும் சி என 3 பிரிவாக வகைப்படுத்தப்பட்டு வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஏ பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஏ பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 50 லட்ச ரூபாயும், பி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 30 லட்ச ரூபாயும், சி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 10 லட்ச ரூபாயும் ஆண்டு சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி சம்பளத்தொகை சமமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால், பிசிசிஐ-யால் வழங்கப்படும் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடு வீரர்களுக்கு 7கோடி ரூபாய் வழங்கப்படும் நிலையில், வீராங்கனைகளுக்கு 50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.
வீராங்கனைகள் முழு விபரம்:
Grade A: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா
Grade B: ரேனுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ராஜேஸ்வரி கெய்க்வாட்
Grade C: மேக்னா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேக்னா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ஸ்னே ரானா, ராதா யாதவ், ஹர்லீன் டியோல், யாஷ்டிகா பாட்டியா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!