Sports
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி -இந்திய அணி அறிவிப்பு.. IPL காரணமாக அணிக்குள் வந்த அனுபவ வீரர் !
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தியிருந்தார். ஆனால் இந்த முறை இருவரும் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர சமீப காலமாக இந்திய அணியில் சிறந்த நடுகள வீரராக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காயம் காரணமாக இந்திய அணி தடுமாறி வரும் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில்,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செய்லபட்டு வரும் அனுபவம் வாய்ந்த அஜின்கியா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணி விவரம் "ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், சத்தேஸ்வர் புஜாரா,விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல். ராகுல், கே.எஸ். பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் , ஜெயதேவ் உனத்கட்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?