Sports
காணாமல் போன வீரர்களின் கிரிக்கெட் BAT-கள்.. திகைத்த வெளிநாட்டு வீரர்கள்.. IPL தொடரில் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரின் இந்தாண்டு சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரிஷப் பந்த்தின் காயம் காரணமாக இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமை தாங்கி வருகிறார். ஆனால், இந்த தொடரில் இதுவரை மோசமான ஆடிவரும் அந்த அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் காணாமல் போயுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று டெல்லி அணியினரின் கிட் பேக்குகள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் டெல்லி விமான நிலையத்தில் மைதானத்துக்கு வந்தநிலையில், அதில் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
காணாமல் போன விளையாட்டு உபகரணங்களில் யஷ் துல்லின் ஐந்து பேட்களும், டேவிட் வார்னரின் மூன்று பேட்களும், பில் சால்ட்டின் மூன்று பேட்களும், மிட்செல் மார்ஷின் இரண்டு பேட்களும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இது போன்று நடப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!