Sports
CSK அணியே தோற்க நினைத்தால் கூட நீங்க ஜெயிக்க மாட்டீங்க.. RCB அணியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள் !
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணியை சந்தித்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் ருத்துராஜ் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் கான்வே மற்றும் ரஹானே அதிரடி ஆட்டம் ஆடினர்.ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே பெங்களூரூ பந்துவீச்சை விளாசி தள்ளி 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு புறம் சிறப்பாக ஆடிய கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களுரு அணி அடுத்தடுத்து கோலி மற்றும் லோம்ரோர் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டு பிளிஸிஸ் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர்.
தொடக்கத்திலேயே டு பிளிஸிஸ் லோம்ரோர் கொடுத்த கேட்ச்களை சென்னை அணி தவறவிட்ட நிலையில், டு பிளிஸிஸ் சென்னை பந்துவீச்சை விளாசி தள்ளினார். இதனால் ராக்கெட் வேகத்தில் ரன்கள் பெங்களூரு அணியை நோக்கி குவிந்தது. மற்றொரு பக்கம் மேக்ஸ்வெல்லும் ருத்ரதாண்டவம் ஆடினார்.
ஒருவழியாக தோனியின் அபார கேட்ச் காரணமாக டு பிளிஸிஸ், மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த நிலையில் சென்னை அணி தொடர்ந்து நம்பிக்கையோடு பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது. இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் பெங்களூரு அணியால் 10 ரன்கள் மட்டுமே குவிக்க முடித்ததால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி தந்த ஏராளமான கேட்ச் வைப்புகளை சென்னை அணி தவறவிட்டது. அப்படிப்பட்ட நிலையிலும் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவிய நிலையில், சென்னை அணியே தோற்க நினைத்தால் கூட பெங்களூரு அணி வெற்றிபெறாது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!