Sports

மும்பைகாரர் என்றால் மும்பை வீரர்தான் வேண்டும் என்று சொல்வீர்களோ?-சஞ்சய் மஞ்ரேக்கருக்கு ஸ்ரீகாந்த் பதிலடி!

தற்போது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் பலர் வர்ணனையாளர்களாக பணிபுரிந்து வருகின்ற்னர். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த் ஐபிஎல் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்தார்.

அதே போட்டியில் மும்பையை சேர்ந்த சஞ்சய் மஞ்சரேக்கர், யூசுப் பதான் ஆகியோரும் வர்ணனை செய்துகொண்டிருந்தனர். அப்போது உலகக்கோப்பையில் இடம்பிடிக்கும் வீரர்கள் குறித்து பேச்சு எழுந்தது. அப்போது பேசிய ஸ்ரீகாந்த் "என்னுடைய அணியில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருப்பார்கள்.

இவர்கள் தவிர ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா , அக்சர் பட்டேல் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள் எனக் கூறினார் அப்போது வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் "இந்திய அணியியல் ஆல் ரவுண்டர் ஷார்துல் தாகூர் 11 பேர் அணியில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் . எனவே அவரை தாராளமாக தேர்வு செய்யலாம்" எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்ரேக்கரின் கருத்தை மறுத்து " நீங்கள் மும்பையைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஷார்துல் தாகூர் பெயரை இங்கே சொல்கிறீர்கள். ஆனால் அணியில் ஷார்துல் தாகூர் வேண்டாம். அர்ஷிதீப் சிங் வேண்டுமானால் இருக்கலாம். ஷார்துல் விக்கெட்டுகளை எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அவர் ஓவருக்கு 12 ரன்களை வழங்குவார்" என பதிலடி கொடுத்தார்.

முன்னதாக முரளி விஜய் சஞ்சய் மஞ்ரேக்கர் குறித்து இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய் "தென்னிந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.இப்படி கமென்ட்டெல்லாம் அடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியிலேயே அவர்தான் மீண்டும் கோட் சூட் போட்டுக் கொண்டு அமர்கிறார். அப்படியெனில், அவர்களெல்லாம் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லையோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரோஹித் சர்மா குறித்து நான் அப்படி சொல்லவேயில்லை.. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தியை மறுத்த CSK வீரர் !