Sports
KKRvsGT :6,6,6,6,6.. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங்.. இறுதி 8 பந்தில் 41 ரன்கள் விளாசி அதிரடி !
நடப்பு சாம்பியனும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார். '
இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரிதிமன் சாஹா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனும் கில்லும் ஜோடி சேர கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் சிறிய அதிரடி ஆட்டம் ஆடி 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இரு தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் நிதானமாக அணியை கட்டமைத்தனர். இரண்டு இரண்டு ரன்களாக குவித்த இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதில் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன் பின்னர் இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் அதிரடியாக ஜொலித்தார். 24 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 15 ரனகளிலும் , ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பினர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும் கேப்டன் நிதேஷ் ராணாவும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் நிதேஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
எனினும் தொடர்ந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது 4 ஓவருக்கு 50 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார்.
இதில் இருந்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவுவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது. அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!