Sports
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. மும்பை மைதானத்தில் தோனிக்கு நினைவிடம்.. சரித்திர சிக்ஸருக்கு கெளரவம் !
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் தலைமையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குலசேகரா பந்துவீச்சில் தோனி சிக்ஸர் விலாசி இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த தருணமே இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த வரலாற்று சிக்சரை கவுரவிக்கும் விதத்தில் அந்த சிக்சர் விழுந்த இருக்கைகளை நினைவிடமாக மாற்ற மும்பை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் தோனியின் சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள, 4 அல்லது 5 இருக்கைகளை அதன் நினைவிடமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் தோனியை கெளரவப்படுத்த , மும்பை வான்கடே மைதானத்தில் வரும் சனிக்கிழமை சென்னை மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியின்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட்டில், அவர் பெயரில் ஒரு பெவிலியன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது தோனிக்கு மற்றுமொரு நினைவிடம் அமைக்கபடுவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதை போல நினைவிடம் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?