Sports
நவீன வசதிகளுடன் அதகளப்படுத்தும் சேப்பாக்கம் மைதானம்.. புதிய வசதிகளை கண்டு அசந்து போன இந்திய வீரர்கள் !
இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இந்த மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்ட நிலையில், புதிதாக ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் அமைக்கப்பட்டன.
ஆனால், இந்த கேலரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. இதனால் மூடப்பட்ட அந்த கேலரிகளோடு சென்னையில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. எனினும் இந்த கேலரி பிரச்சனை காரணமாக முக்கியமான போட்டிகளை சென்னை இறந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த கேலரி தொடர்பான பிரச்சனை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், 2022-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் பழைய பெவிலியன் கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளோடு புதிய பெவிலியன் கட்டிடம் கட்டப்பட்டது. அதோடு வீரர்கள் ஓய்வு அறையும் நவீனப்படுத்தப்பட்டது. இது தவிர உடற்பயிற்சிக் கூடம், உள்ளரங்க வலைபயிற்சி வசதிகளும் புதியதாக அமைக்கப்பட்டன.
மேலும், பெவிலியன் பகுதியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டோர் மற்றும் இந்திய அணி குறித்த பல்வேறு நினைவுச் சின்னங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் கேலரியை கடந்த 17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் அந்த கேலரிக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், போட்டிக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டிரெஸ்ஸிங் ரூம் குறித்து இந்திய வீரர்கள் பேசும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் புதிய வசதிகள் குறித்து பெருமையாக பேசியுள்ள நிலையில், சக வீரர்கள் சூரிய குமார், சாஹல்,ஷார்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்த அனுபவம் குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?