Sports
"IPL-ஐ விட PSL தொடரைதான் ஏராளமான மக்கள் பார்க்கிறார்கள்" -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் கருத்து !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சேர்க்கப்படாத நிலையில், அந்த நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் PSL லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிலையில், தற்போது இந்தாண்டுக்கான PSL லீக் போட்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நேற்று முந்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் லாகூர் அணியும் முல்தான் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் இறுக்கத்தில் களமிறங்கிய கேப்டன் ஷாஹீன் அப்ரிடி 15 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் ஆடிய முல்தான் அணியும் ஆரம்பத்தில் இருந்தே அட்டகாசமாக ஆடியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 5 பந்தில் முல்தான் அணி 9 ரன்களை குவிக்க இறுதிப்பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் முல்தான் அணி 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை விட PSL தொடரை ஏராளமான மக்கள் பார்க்கிறார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜாம் சேத்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”ஐபிஎல்லை விட PSLதொடங்கி பாதிதூரம் தான் வந்துள்ளது. ஆனால், தற்போது PSLக்கு கிடைத்திருக்கும் ரீச் என்பது ஐபிஎல்-ஐ விட அதிகமாக உள்ளது. PSL போட்டி தொடங்கும் போதுதே 11ஆக உள்ள புள்ளிகள் போக போக 18லிருந்து 20 புள்ளிகளை தாண்டிவிடுகிறது.
இந்த PSLதொடரின் இறுதிப்போட்டியை மட்டும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிஜிட்டல் வழியாக பார்த்துள்ளனர். ஐபிஎல்லின் டிஜிட்டல் மதிப்பீடு 130 மில்லியனாக இருக்கும் நிலையில், PSL தொடர் 150 மில்லியனுக்கும் அதிகமாக வியூவர்ஸ்களை பெற்றுள்ளதுபாகிஸ்தானுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி' எனக் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?